"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது உலகத்தவர் அனைவரும் அறிந்த சத்தியவாக்கு இருப்பினும் பிணிகளை எல்லாம் வென்று மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்ற வள்ளலார் எடுத்துரைத்த உடலை வளர்க்கும் உபாயம் அறியாமல் மனிதன் ஓடி ஓடி அலைந்து திரிந்து நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வருபவர்களின் உடல் பிணியை போக்குவதற்கு உடல் தழைக்க மருத்துவச் சாலை வழங்கிய வள்ளலார் வழியில் R.P மிஷன் பவுண்டேஷன் ஆனது மருத்துவ சேவை ஆற்றி வருகின்றது.
உடலை வளர்க்கும் உபாயம் அறிந்து உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. வள்ளலார்
நோயியில்லாத மனிதனை காண்பதே இன்று அரிதாகிவிட்டது ஔவை பாட்டி இன்று இருந்து இருந்தால் "அரிது அரிது நோயற்ற மனிதனை காண்பது அரிது" என்று பாடிஇருப்பாரோ என்னவோ என்கின்ற அளவிற்கு மனிதகுலம் வாழ்வியல் நெறிகளை மறந்து வாழ்ந்து பல்வேறுபட்ட நோய்களுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றது.
மருத்துவ உதவிகள்
சக மனிதர்களின் உயிர்களை எல்லாம் தம் உயிராய் எண்ணி அவர்களின் உடல் பிணியை போக்குவதற்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றோம்.
அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்துதல், இயற்க்கை உணவின் மூலம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்க்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல், நீடிய பிணியால் துன்புற்று வாழ்பவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல், அவசர காலகட்டங்களில் தேவையான மருத்துவ உதவிகளை செய்து தருதல் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகளை செய்து வருகின்றோம்.
இறைவன் அருளால் மரணத்தருவாயில் இருந்த பல்வேறு பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி அவர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள்.
உயிர் இரக்கமே இறைவன் அருளைப் பெறுவதற்கு உன்னத வழி! பிற உயிர்களின் மீது யாம் கொண்ட தயவே என்னை எரா நிலை மிசைக்கும் ஏற்றியது - வள்ளலார்
இந்த மகத்தான மருத்துவ சேவை தொடர்ந்து நடைபெறுவதற்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் சக்திக்கு ஏற்ப நன்கொடை வழங்கி சக உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவிடுங்கள்!
"நீடியபிணியால் வருந்துகின்றோரேன்னேருறக் கண்டுந் துடித்தேன்" என்ற வள்ளலார் உடைய வரிகளுக்கு இணங்க ஏழை மக்களுடைய உடற்பிணியை போக்குவதற்கு 'R.P மிஷன் பவுண்டேஷன்' மருத்துவச் சேவை வழங்கிவருகின்றது.