எதிர் கால திட்டங்கள்

...

வள்ளலார் கோவில்

வள்ளல் பெருமான் இளமை பருவத்திலேயே இறைவவனால் ஆட்கொட்கொள்ளப்பட்ட ஞான குழந்தையவர். வள்ளல் பெருமான் எதையும் அறிவினால் சிந்தித்து அதில் கிடைக்கும் விளக்கத்தின்படி நடந்து மனத்தினையும், பஞ்ச இந்திரியங்களை வென்று அருட்பெரும் ஜோதி ஆண்டவனை கண்டு அண்டம் முழுவதும் பரம் பொருளால் படைக்கப்பட்டது, படைக்கப்பட்ட அனைத்திலும் அவரே நீக்கமற நிறைந்துள்ளார் என்பதனை உணர்ந்து உலகறிய செய்து அருட்பெரும் ஜோதி ஆண்டவனை அனைவரும் காணவேண்டும் என்ற சிந்தனையால் அருட்பெரும் ஜோதியை அடையும் வழி நெறிமுறைகளை வகுத்தாய்தவர் வள்ளல் பெருமான் அவர் சன்மார்க்க ஞானம் எங்கும் நிறையவேண்டி அவருக்கு கோவில் கட்டிட வேண்டும் என்பதே RP Mission Foundation நோக்கமாகும் வள்ளல் பெருமானின் கோவில் அவரின் வாக்குப்படி மரணமில்லா பெறுவாழ்வின் திறவுகோலாக உயிர்களுக்கு உணவு அளிதலினை தலையாய கடமையாக கொண்டு ஒரு தர்மசாலையாக செயல்படும்.

...

வள்ளலார் கல்வி நிலையம்

வள்ளலார் கல்வி நிலையமானது சமரச சன்மார்க்க நெறியினை உலகறிய செய்யவேண்டும் என்பதே நோக்கமாக செயல்படுகின்றது. இதில் மமுக்கிய செயல்பாடாக குழந்தைகளுக்கு அந்நெறியினை பின்பற்றும் வழிமுறைகளை காற்றறிவித்து செம்மை படுத்துதல் வேண்டும் ஏனெனில் குழந்தைகள் வளரும் பாரதத்தின் எதிர்கால தூண்களாகும். குழந்தைகள் பசுமையான நிலங்கள் இவற்றில் எந்த விதை போட்டாலும் எளிதில் முளைத்துவிடும் எனவே பாரதம் சரியானதாக அமைய நாங்கள் குழந்தைகளுக்கு சரியான பாதையினை காண்பிக்க இத முயற்சியினை கையில் எடுத்துள்ளோம்.
இக்கல்வி நிலையமானது முழுக்க வள்ளல் பெருமானின் உபதேசங்களும் நன்னெறிகளையும் அறிஞர்களின் வாழ்வியல் உபதேசங்களும் காட்டறிவிக்கப்படும்.

...

வள்ளலார் மருத்துவமனை

வறுமையில் வாழும் மக்களுக்கும் இலவச மருத்துவத்தினை வழங்கும். வள்ளல் பெருமானின் வாக்கின் படி சிந்தித்து நோய்களுக்கு ஏற்ற மருந்தினை வழங்க சித்தாந்த முறைப்படி மருத்துவம் வழங்கப்படும் தீராத நோய்களுக்கு தேவைப்படும் பொழுது ஆங்கில முறைப்படியும் வைத்தியம் பார்க்கப்படும்.
வள்ளலார் மருத்துவமனை பிறர் படும் துயரினை போக்க இலவச சேவைகளாக நடைபெறும் பிற ஊர்களுக்கு சென்று இலவச மருத்துவ சேவை முகாம்களும் நடத்தப்படுகின்றது.
தற்போது வருத்துவமாய் அமைக்க இடவசதி இன்மையால் ஊர்களுக்கு சென்று மருத்துவ முகாமினை நடத்தி வருகின்றது நோய்கள் வராமல் தடுப்பதற்கு தக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.