கல்வியின் உதவிகள்
திறமையுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் தொடர்ந்து கல்வி கற்று படித்துப் பயனுற சாத்திர சாலை வழங்கிய வள்ளலார் வழியில், பல்வேறு கல்வி உதவிகளை "R.P மிஷன் பவுண்டேஷன்" அறக்கட்டளை வழங்கிவருகின்றது.
கல்வியின் அவசியம் இன்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிந்திருந்தும் கூட வறுமையின் காரணமாக திறமையுள்ள மாணவர்கள் பலர் அவர்களின் மேற்படிப்பினை தொடர முடியாத நிலை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் இருந்துகொண்டேதான் இறுகின்றது. ஏன் சமீபத்திய கணக்கெடுப்பில் இருந்தும்கூட 0.1 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் வறுமையால் பாடசாலைக்கு செல்லாமல் வேலைக்கு செல்லுகின்ற நிலையை கண்டு நாங்கள் வருந்துகின்றோம்.
தரணியெங்கும் கல்வியின் முக்கியத்துவத்தினை இன்றியமையாமையை எடுத்துரைக்காத தலைவர்களே இல்லை "கல்வி கற்கக்காத்தவன் கலர் நிலம்" போன்றவன் என்ற வரிகள் நமக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
நம் ஔவை பெருந்தகையார்கூட மனிதன் மேம்படுவதற்கு கல்வி அறிவு அவசியம் தேவை என்பதனை "ஞானமும் கல்வியும் ஞாயதால் அரிது" என்ற பொன்மொழி மூலம் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.
திறமைவாய்ந்த, கல்வியில் ஆர்வம் உடைய வறுமையினால் தங்களுடைய கல்வியை தொடர முடியாத மாணவர்களை கண்டறிந்து அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு பல்வேறு வகையான உதவிகளை R.P மிஷன் பவுண்டேஷன் அறக்கட்டளையானது செய்து வருகின்றோம்.
2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் தமிழகமெங்கும் இருக்கக்கூடிய 20,000 மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இக் கல்விச்சேவை தொடர்ந்து நடைபெறுவதற்கு பேருதவியாய் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரியப் பெருந்தகை மக்களுக்கும் நன்றியை என்றேன்றும் தெரிவித்து கொள்கின்றோம்.
இந்த மகத்தான கல்விச்சேவையில் நீங்களும் பாகம் கொண்டு மாணவர்களின் கல்விக்கு உதவ விரும்பினால் கீழே உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து உங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக வழங்கி புண்ணியம் பெருங்கள்.
Towards fees of students (This could include College, Hostel , Mess , Training, Transportation cost., etc)
உங்களின் சக்திக்கு ஏற்ப
1 மாணவனுக்கு 1 மாதத்திற்கு = Rs.3500 / - ( includes food and accomodation -1 month / Per student)
1 மாணவனுக்கு 10 மாதத்திற்கு = Rs.35000 / - ( includes food and accomodation -10 month / Per student)
Arts and Science (or) Diploma பயிலும் 1 மாணவனுக்கு 1 வருடத்திற்கு = Rs. 250000/ -(includes course fees, food and accomodation )
B.E , MBBS ( OR ) Paramedical பயிலும் 1 மாணவனுக்கு 4-5.5 வருடத்திற்கு = Rs. 450000/ -(includes course fees, food and accomodation )
கல்வி உதவி நிரந்தர வைப்பு நிதி = Rs. 1000000 / -
தரணியெங்கும் கல்வியின் முக்கியத்துவத்தினை இன்றியமையை எடுத்துரைக்காத தலைவர்களே இல்லை " கல்வி கற்கக்காத்தவன் கலர் நிலம் போன்றவன் என்ற கூற்றில் இருந்து கல்வியின் முக்கியத்துவத்தினை நம் உணரமுடியும் ஏன் நம் ஔவை பெருந்தகையார்கூட மனிதன் மேம்படுவதற்கு கல்வி அறிவு அவசியம் தேவை என்பதனை "ஞானமும் கல்வியும் ஞாயதால் அரிது" என்ற பொன்மொழி மூலம் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.
கல்வி உதவிக்கான செயல்கள் : எங்களால் இனம் காணப்படுகின்ற மாணவர்களை கல்வியை தொடர்ந்து கற்பதற்கு உதவி வழங்கிய வழங்கி கொண்டிருக்கின்ற அனைத்து கல்வி நிலையங்களுக்கும் எண்கள் நன்றியை என்றேன்றும் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் உயர்கல்வி பயில்வதற்கு அரசு வழங்கின்ற உதவிகளை பெறுவதற்கும் தேவையான வழிகாட்டுதலையும் வழங்கி வருகின்றோம். எங்கள் இந்த சேவையின் மூலம் என்ன செய்வது, எப்படி அணுகுவது மேலும் காரணங்கள் கூறி சுமார் 20000 திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரசு வழங்குகின்ற கல்விக் கடனை பெற்று தந்து உதவி செய்து இருக்கின்றோம்.