அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை!
"எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான்தாளை ஏத்து."
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை (நித்திய அன்னதானக் கூடம்) அருட் கட்டிட பணி நிதி விண்ணப்பம்:
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் சற்குரு நாதர் திருவருட்பிரகாச வள்ளலார் அருட் துணையுடன் 2015-ஆம் ஆண்டில் இருந்து சிறு சிறு சேவையாக தொடங்கி 2020-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் ஓர் அரசு பதிவுபெற்ற அற நிறுவனமாக
"RP மிஷன் பவுண்டேஷன்” (அரசு பதிவு எண்: BIC IV 9/2020)
உறுப்பெற்று திண்டிவனம் பகுதியில் தருமச்சாலை தொடங்கப்பெற்று நடமாடும் அன்னதர்மசாலை வாகனத்தின் மூலமாக பசியினால் வாடும் பல நூற்றுக்கணக்கான வறியவர்களின் பசிப்பிணியை போக்கியும், மேலும் படிப்பு தொடர முடியாமல் தவிக்கின்ற கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவிகளை வழங்கியும், நோயினால் கடும் அவதிப்படும் மக்களுக்கு மருத்துவ உதவியும், பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு அரிசி & மளிகை பொருட்களை வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் காப்பகங்களுக்கு சென்று அன்னம்பாலித்து ஆடிப்பாடி மகிழ்வித்தும், மார்கழி மாதம் திண்டிவனம் நகரை சுற்றியுள்ள சாலையோரங்களில் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கு கம்பளிப் போர்வை வழங்குதல் போன்ற மனிதநேயமிக்க சமுதாய நலப்பணிகளை செய்து வருவது யாவரும் அறிந்ததே.மனிதநேயமும், உயிர் நேயமும், ஆன்ம நேயமும் கண்ணும் கருத்துமாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் இறைவன் அருளால் இவ்வளவு பணிகளையும் செய்து வருகின்ற “RP மிஷன் பவுண்டேஷன்” அறக்கட்டளையானது இதுவரை சொந்த இடம் இல்லாமல் இயங்கி வருகிறது. “RP மிஷன் பவுண்டேஷன்” ஆனது தனிநபருக்கு உரிமையானது அல்ல. இது பொது நோக்கத்துடன், தர்மச்சிந்தனையுடன் இறக்கமுடைய அன்பர்களால் நடத்தப்படுகின்ற ஒரு பொது ஸ்தாபனம் ஆகும்.ஜீவகாருண்ய திருப்பணி எக்காலத்திலும் தடைபடாமல் தொடர்ந்து தங்கு தடையின்றி நடத்திட ஓர் சொந்த இடமும், நீர் மற்றும் மின்சார வசதியுடன் கூடிய கட்டிடம் அவசியமாகிறது. எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையினால் திண்டிவனத்தில் சுமார் 6000 சதுர அடி பரப்பளவில் ஒரு நிரந்தரமான நித்திய தருமச்சாலையும், வழிபாட்டிற்கான சத்திய ஞான சபையும் அமைக்க திருஉள்ளம் கொண்டோம்.தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய உள்ளங்களே, கிடைப்பதற்கரிய மிகவும் அரிதான மனிதப்பிறவியின் பெரும்பயனை உணர்ந்துபாகம் பெற்று தங்கு தடையின்றி நடைபெற்று வரும் ஆன்மநேய அறப்பணிகளுக்கு பூமி தானம் செய்து ஆன்மலாபம் பெற்றுய்ய வேண்டி உங்களின் பொன்னான பாதங்களை வள்ளலார் பொற்பாதங்களாக வணங்கி விண்ணப்பிக்கின்றோம்.
1 சதுர அடி நிலத்துடன் கட்டிட திருப்பணி   - ரூ. 5000 /-
10 சதுர அடி நிலத்துடன் கட்டிட திருப்பணி - ரூ. 50000 /-
For Donation thro bank transfer:
For Donation by Cheque:
தொடர்புக்கு:9566738366 | 8940648540 | 9842554826
வடலூரில் வள்ளலாருக்கு பொதுமக்கள் 80 காணி நிலத்தினை வழங்கி புண்ணியம் பெற்றதைப் போல், நீங்களும் திண்டிவனம் தருமச்சாலைக்கு பூமிதானம் செய்து புண்ணியம் பெறுங்கள்.
அள்ளிக்கொடுக்கும் தங்கள் உள்ளத்திலும், இல்லத்திகும் இறைவன் எழுந்தருளி அருள்புரிவாராக!
"அன்னதானமே மாகாதானம்"
"ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்"
தர்மம் செய்வோம்!
தயவுடன் வாழ்வோம்!
திருச்சிற்றம்பலம்.