இது போன்ற எண்ணற்ற உதவிகளை செய்வதற்கு தேவையான நிதி மற்றும் பொருள் உதவிகளை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் அளிப்பது 100 ரூபாயாக இருந்தால் கூட அது ஒரு ஏழையின் பசியை போக்குவதற்கு பேருதவியாக இருக்கும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதனால் தனி ஒரு மனிதனில் துவங்கி நம் தேசத்தை ஆளுகின்ற அதிபர், பிரதமர் வரை ஏன் இன்னும் சொல்வோமாயானால் உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு தொழில்களை விருத்தி செய்து கொண்டிருக்கின்ற தொழிலதிபர்கள் வரை என்ன செய்வது என்று திகைத்து கொண்டிருக்கின்றனர். இவற்றிற்கு எல்லாம் தீர்வு என்னவென்று தெரியாத நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு நாட்கள் மட்டும் கடந்து கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்வினால் "பூ விற்பவர்களில்" தொடங்கி பங்குசந்தை வரையில் ஏன் உலக பொருளாதாரமே சீர்குலைந்து கொண்டிருக்கின்றது. இம்மிகப்பெரிய பாதிப்பில் இருந்து மீண்டு எழுவதற்கு மாநிலத்தை ஆளுகின்ற முதல்வரும், நம் தேசத்தை ஆளுகின்ற பிரதமரும் மாறிமாறி மக்களிடையே நிதி உதவி கேட்டு ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் வைத்ததற்கு இணங்க, நாடெங்கும் உள்ள அன்பு உள்ளம் கொண்ட தயவாளர்கள் மனித நேயத்தை காக்கின்ற வகையிலே அவர் அவர்களால் இயன்ற தொகையை அரசாங்கத்திற்கு வழங்கி இவ் இன்னலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டு எழுவதற்கான உதவிகளை ஊன்று கோலாய் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க மற்றொரு புறத்தில் எண்ணற்ற தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவியினை பல்வேறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர், இருந்தாலும் உதவி தேவைப்படுவோர்களின் எண்ணிக்கை பார்க்கும்போது அவற்றில் ஒரு சிலருக்கு மட்டுமே போதுமான தேவைகளை வழங்கக்கூடிய நிலைமை இருந்து கொண்டிருக்கின்றது.
ஒரு வேளை உணவிற்கு கூட வழியில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. Corona நோயினால் பாதிக்கப்பட்டால் கூட மனிதன் சில நாட்கள் உயிர் வாழ முடியும், ஆனால் பசியினால் பசிப்பிணியினால் நாட்கள் ஓட்டுவது என்பது மிகவும் கடினம், ஏன் பசியால் வருகின்ற கொடுமையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் இங்கே துன்பப்பட்டு கொண்டிருக்கின்றனர். அது போன்று நிலைமையில் உள்ள பசியினால் வாடுகின்ற ஜீவன்களுடைய பசிப்பிணியை போக்குவதற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
தினம் தினம் வேலை செய்து வந்த ஊதியத்திலிருந்து அன்றாட வாழ்க்கை பொழுதை ஓட்டிய தினக்கூலிகளுடைய வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி உள்ளது.
தொடர்ந்து மக்கள் நலப் பணியாற்றி வரும் நமது "RP மிஷன் பவுண்டேஷன்" அறக்கட்டளையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.