ஆன்ம சுதந்திரத்திற்காக பாடுபட்டீர் பயன்அறியீர்

ஒவ்வொருவரும் பிறந்து வளர்ந்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்பதற்காக பொருள் சம்பாதிக்க ஏதாவது ஒருவகையில் இடைவிடாது உழைக்கின்றோம் பொருள் ஈட்டுகிறோம் அதன் பலனை தேக சுதந்திரத்திற்காகவும் போக சுதந்திரத்திற்காகவும் ஜீவ சுதந்திரத்திற்காகவும் மட்டுமே படாதபாடுபட்டு உழைத்து அனுபவிக்கிறோம்.

ஆன்ம சுதந்திரத்திற்காக உழைக்க தவறிவிடுகிறோம்:

உயிரையும் உடம்பையும் அழிக்காமல் பாதுகாக்க ஆன்ம சுதந்திரம் அவசியம் தேவை. ஆன்ம சுதந்திரம் பெற்றால் தான் அருள் சுதந்திரம் பெறமுடியும் அருள் சுதந்திரம் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும். மரணத்தை வென்றால் தான் கடவுள் சுதந்திரம் பெறமுடியும். கடவுள் சுதந்திரம் பெற்றால் மட்டுமே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக ஆபமுடியும். உழைப்பே உயர்வுக்கு வழிகாட்டும்! நாம் உழைக்கும் உழைப்பு எதுவாக இருந்தாலும் நம் உயிரையும் உடம்பையும் காப்பாற்ற வேண்டும். உயிரையும்உடம்பையும் காப்பாற்றாத உழைப்பு வீண் விரையமான உழைப்பாகும். வள்ளலார் பாடல்,

“காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டெருவும் போட்டுக்கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கேகுடியிருப்பீர் ஐயோ நீர் குறித்தறியீர் இங்கேபாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்பட்டதெலாம் போதும் இது பரமர் வருதருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்எண்மை உரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே! “

பாடலின் விபரம்:
அடர்த்தியான மேடுபள்ளமான பெரிய காடு. அகற்ற சிரமமான பெரிய சிறிய பாறைகள் மற்றும் சிறிய பெரிய கற்கள் மேடுபள்ளமான மண்குவியல்கள். கரடுமுரடான அடர்த்தியான மரம் செடிகொடிகள் முட்கள் நிறைந்த மரங்கள் மற்றும் எதற்கும் பயன் படாத நெருக்கமான புதர்கள் நிறைந்த இடத்தை ஒரு அறிவுள்ள மனிதனிடம் ஒப்படைக்கப் படுகிறது.

அந்த மனிதன் அந்த இடத்தை தனது அறிவு கூர்மையுடன் பல திறமையான ஆட்களின் உடல் வலிமைக்கொண்டும் பல பெரிய சிறிய கருவிகளைக் கொண்டும் எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த இடத்தில் தேவை இல்லாததை அனைத்தையும் அகற்றி மற்றும் கருவிகளைக் கொண்டு சமப்படுத்தி. பன்படுத்தி பயன்படுத்தியும் நன்செய் பயிர் வைக்கும் அளவிற்கு இயற்கையான காட்டு எருவும் போட்டு நன்செய் பயிரிடும் நிலமாக கொண்டு வந்துவிட்டார். மேலும் ஆழ்கிணறு தோண்டி நன்செய் விவசாயம் செய்வதற்குண்டான வற்றாத தண்ணீர் கிடைக்கும் அளவிற்கும் செய்துவிட்டார்.

இவ்வளவு பெரு முயற்சிசெய்து அறிவுபூர்வமாக அழகுபடுத்தி விட்டார். அனைத்து மக்களுக்கும் பயன்படும் நெல் கரும்பு வாழை வெற்றிலை போன்ற நன்செய் பயிர் வைக்கும் அளவிற்கு கொண்டுவந்துவிட்டார். இவ்வளவு பாடுபட்டு உழைத்து அனைவருக்கும் பசியைப்போக்கும். சாத்வீக உணவு கிடைக்கும் நன்மைதரும் பயிரான நன்செய் பயிர் வைக்காமல். கடுகு என்னும் விஷப்பயிர் விதைத்து எவருக்கும் பயன் இல்லாமல் செய்துவிட்டார். இதைத்தான் வள்ளலார் காடுவெட்டி நிலம் திருத்தி காட்டுஎருவும் போட்டு கரும்பை விட்டு கடுகு விதைத்து களிக்கின்ற உலகீர். பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர் என்று சொல்கிறார். அதேபோல் கஷ்டபட்டு கிடைத்த மனித்தேகம்.

மனிதபிறப்பு உயர்ந்த பிறப்பு:

எல்லாம்வல்ல தனித்தலைமைப் பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் தமக்கு சம்மான ஆன்மாவை இந்த பஞ்சபூத உலகிற்கு அனுப்பி தாவரம், ஊர்வன, பறப்பன, நடப்பன, அசுரர், தேவர் போன்ற ஆறு வகையான பிறப்பைக் கொடுத்து அவைகளுக்கு உண்டான துன்பம், துயரம், அச்சம், பயம், மரணம் போன்ற துன்பங்களை இடைவிடாது கொடுத்து. அவைகளை சிரமம் பாராமல் அனுபவித்து அந்த ஆறு பிறப்புக்கள் ஒவ்வொன்றிலும் கடினமாக உழைத்து முழுமையாக தேர்ச்சி பெற்று. இறுதியாக உயர்ந்த அறிவாகிய ஏழாவது பிறப்பாகிய மனிததேகம் இறைவனால் கொடுக்கப்பட்டது. மனிதர்களுக்கு உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டதின் நோக்கமே.

எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்பசித்தி பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே மனித தேகம் கொடுக்கப்பட்டதின் நோக்கமாகும். அருள் பெறவேண்டிய மனிதகுலம் மனிததேகமானது அருளைப்பெற்று இறைநிலையை அடையாமல் பொருளைப்பெற்று பிறந்து பிறந்து. இறந்து இறந்து பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளது.

இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று இறப்பு பிறப்பு இல்லாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழவேண்டிய மனிதகுலம். பஞ்ச பூத உலகின் மாயையில் சிக்கி மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்ற உலக பொருள் ஆசையில் ஆர்வம் கொண்டு அருள் பெற முடியாமல். அருள்பெரும் வழித்தெரியாமல் இறந்து இறந்து. பிறந்து பிறந்து வெவ்வேறு பிறவிகள் எடுத்து இவ்வுலகிலே வாழ்ந்து கொண்டு இருக்கின்ற நிலையில் ஆன்மாக்கள் தவித்துக் கொண்டு உள்ளன. வள்ளலார் காட்டும் நேர்வழி இதுவரையில் இருந்த்துபோல் இனியும் விண்காலம் கழிக்காதீர்.

பொய்யான சாதி சமய மதங்களின் கொள்கைகளைப் பின்பற்றி ஆன்மாவின் அருள் அறிவு விளங்காமல். நேர்வழி தெரியாமையால் அறியாமையால் அஞ்ஞானத்தால் உழன்று உழன்று அழிந்து அழிந்து பட்டதெல்லாம் போதும். இது பரமர் வருதருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப்பெறுவீர். இது உண்மை உரைக்கின்றேன் வாருங்கள் என மனிதகுலத்தை மேல்நிலைக்கு அழைத்துச் செல்ல அழைக்கின்றார் வள்ளல்பெருமான். மேலும் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களைப் பின்பற்ற வழிகாட்டுகிறார். வள்ளலார் பாடல்,

“ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவேமோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்முக்காலத் தினும்அழியா மூர்த்தம் அடைந் திடவே! ”

மனிதகுலம் அருள் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவதற்கு நேரிடையாக வடலூர் சத்திய ஞானசபைக்கு வருகை தருகின்றார் அருள் பெறுவதற்கு ஆசை உள்ளவர்கள் வருகைதாருங்கள் என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார். ஆன்மா மனித தேகம் கிடைத்த அருமைத் தெரியாமல். அருள் பெறமுடியாமல் மரணத்தை வெல்ல வழித்தெரியாமல். வீணாக பாடுபட்டு பயன் அடைய முடியாமல் வீண்காலம் கழித்து கொண்டு இருக்க வேண்டாம். இப்பிறவியிலே பெறவேண்டியதை பெற்று கொள்ளலாம் சந்தேகம் வேண்டும் இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்வாக்கு என தெரியப்படுத்துகின்றார். வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்,

“சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே”

மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்இதுநல்ல தருணம் அருள் பெறுவதற்கே! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *