ஒவ்வொரு உயிரையும் இயக்குவது ஆன்மா என்பதை அறிந்தவர் வள்ளலார்.
ஆன்மாவிற்குள் இருந்து ஆன்மாவை இயக்குபவர்தான் கடவுள் என்பதைக் கண்டுபிடித்தவர் வள்ளலார்.
உயிருள்யாம் எம்முள்உயிர் இவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுக என்று உரைத்தமெய்ச் சிவமே! (அகவல்)
உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே! (அகவல்)
கடவுளைப் புறத்தில் தேடிக்கொண்டே உள்ளார்கள்
கடவுளைக் கண்டகண்ட இடங்களில் புறத்திலே தேட வைத்து விட்டார்கள் சாதி சமய மதவாதிகள்.
ஆகவேதான் நாம் கடவுளை நேரிடையாக தொடர்பு கொள்ளமுடியாமல்அருள்பெற முடியாமல் மூடமாக கண்மூடித்தனமாக குருடர்கள் யானையைக் கண்டதுபோல் பல பல தெய்வவழிபாடுகளைச் செய்து.நரை.திரை.பிணி.மூப்பும்.
பயமும் இறுதியில் மரணமும் வந்து விடுகிறது. மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளோம்.
வள்ளலார் பாடல்!
” உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொது என அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின் றேன்பொதுப் பாட்டே.! “
ஒவ்வொரு உயிரிலும் பொதுவாகத் திருநடம் புரியும் ஒரு திருப்பொதுவானவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொண்டேன். அந்த மெய்ப்பொருள்தான் அருள் வழங்கும் ஆற்றலும் தயவும் தனிப்பெருங்கருணையும் உள்ளதாகும். அந்த தனிப்பெருங்கருணைக் கடவுளை (கடலை) தொடர்புகொள்ளும் வழியைக் (சாலையை) கண்டுகொள்ளவே தோற்றுவிக்கப்பட்டதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சத்திய தர்மச்சாலை.சத்திய ஞானசபையாகும்
கடவுளைத் தொடர்புகொள்ளும் வழி
சாதி சமயம் மதம் இனம் மொழி நாடு உயிர்கள் என்கின்ற பேதம்இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசிக்கும் பொது உரிமையே ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்
சன்மார்க்கத்தை பின்பற்றும் ஆன்மநேயமுள்ள அன்பர்கள் மனிதநேயமே முழுமையாக பெற இயலாமல் சாதி சமயம் மதத்தில் பற்று வைத்துக்கொண்டு ஏதோ அவர்களால் முடிந்தளவு அன்னதானம் மட்டும் செய்து வருகிறார்கள். *உயிர்நேயம் இல்லாமல் வேற்றுமை உணர்வோடும் கருத்துவேறுபாட்டுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்*.
இவர்கள் எப்போது ஆன்மநேயத்தை கடைபிடித்து. ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் போகிறார்களோ தெரியவில்லை.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் காப்பாற்ற வேண்டும்.
ஆன்மநேயம் இல்லாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எக்காலத்திலும் தொடர்பு கொள்ளவே முடியாது
வள்ளலார் பாடல்!
” எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.!
ஒழுக்கம் நான்கு
இந்திரிய ஒழுக்கம்.”
கரண ஒழுக்கம். ஜீவ ஒழுக்கத்தை கடைபிடித்த ஞானிகள் நிறையபேர் வாழ்ந்துள்ளார்கள் வாழ்ந்துகொண்டும் உள்ளார்கள்.ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒழுக்கத்தை கடைபிடித்தவர்கள் ஒருவரும் இல்லை.
ஆன்ம ஒழுக்கம்
யானை முதல் எறும்பு வரை தோன்றிய *சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும்* யாதும் நீக்கமறக்கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாகும்
இவ்வண்ணம் நின்றால்
1.சாகாக்கல்வி
2.தத்துவ நிக்கிரகம் செய்தல்
3.ஏமசித்தி
4 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
போன்ற நாம் பெறும் அரும் புருஷார்த்தங்கள் நான்கும் கைகூடும்.
வள்ளலார் சொல்லுவதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன் குறிப்பிப்பேன்
என்னை ஏறாநிலைமிசை ஏற்றிவிட்டது யாதெனில். தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும் அந்த ஒருமை இருந்தால்தான் தயவுவரும். தயவு வந்தால்தான் பெரியநிலைமேல் ஏறலாம்.
இப்போது என்னுடைய அறிவு அண்ட அண்டங்களுக்கும்அப்பாலும் கடந்திருக்கிறது.
அது அந்த ஒருமையினால் தான் வந்தது என்று மிகத் தெளிவாகப் பேருபதேசத்தில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்
மண் உயிரெலாம் களித்திட (மகிழ்ச்சிஅடைய) நினைத்திட்ட ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே !
வள்ளலார் பாடல்!
“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்! “
கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றி துன்பத்தைப் போக்கி அருட்ஜோதியாம் ஆட்சியில் அமர்ந்து ஐந்தொழில் வல்லபத்தை பெற்று ஆட்சிபரிபாலனம் செய்துகொண்டு இருப்பவர் வள்ளலார்
வள்ளலார் பாடல்!
” துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித்தது நினைச்
சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
சுதந்தரமதானது உலகில்
வன்பெலாம் நீக்கி நல்வழியெலாம் ஆக்கி மெய்
வாழ்வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம்களித் திடநினைத்தனை உன்றன்
மனநினைப் பின்படிக்கே
அன்பநீ பெறுக உலவாது
நீடூழி விளை
யாடுக அருட்சோதியாம் ஆட்சிதந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணைநம் ஆணைஎன்றே
இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
திசைவுடன் இருந்தகுருவே
எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
இலங்குநட ராஜபதியே.! “
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடித்தால் மட்டுமே அருளைப் பெறமுடியும்.
மேலே கண்ட பாடலும் அதில் உள்ள கருத்துக்களும் மிகவும் முக்கியமானது.
உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க! (அகவல்) இதுவே ஆன்மநேயம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !