எவற்றை உட்கொள்வதினால் மரணம் வருகின்றது? மரணமில்லா பெருவாழ்விற்க்கு எவை எவைகளை உண்ணவேண்டும்? இதோ விளக்கம் தருகின்றார் வள்ளலார்!

ஆகாரம் மாயை சம்பந்தமானது.

அருள் கடவுள் சம்பந்தமானது.

ஆகாரம் உட்கொள்ளுகின்றவரை ஆண்டவரின் அருள் கிடைக்க வாய்ப்பே இல்லை.

வள்ளலார் பாடல் !

ஈரமும் அன்பும் கொண் டின்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ

ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்

ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து 

ஊர் அமுதுண்டு ஒழிந்துகொண்டே உள்ளோம்.

ஆகாரத்தில் இரண்டு வகை உள்ளது

புழுக்கின்ற உணவு, புழுக்காத உணவு என இரண்டுவகை உள்ளது

நாம் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் அதன் தன்மைக்குத் தகுந்தவாறு இரத்தம் சுக்கிலம் மலம் சிறுநீர் வியர்வை அழுக்கு துர்நாற்றம் போன்றவை உடம்பில் உண்டாவது அனைத்தும் புழுக்கின்ற ஊர்அமுது என்னும் உணவால் உண்டாகிறது. 

புழுக்காத உணவு

சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காது இருக்கின்ற வஸ்துவை (ஆகாரம்) உட்கொள்ள வேண்டும்.

 புழுக்காத உணவு யாதெனில்?

சர்க்கரை,தேன், கற்கண்டு, வெல்லம், அயன் முதலிய செந்தூரம், தாமிரம் முதலிய பஸ்பம் முதலிய வஸ்துக்களை உட்கொண்டு தேகத்தை நீட்டிக்க செய்ய வேண்டும் இந்த உணவே அருள் பெறும் வாய்ப்பை உண்டாக்கும் உணவாகும்.

புதியதாக சுத்த சன்மார்க்கத்தை பின்பற்ற விருப்பம் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியது! 

மாமிசத்தை எக்காலத்திலும் (புலால்) உண்ணாமல் இருக்க வேண்டும். தாவரம் முதலிய சாத்வீக உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்

அதிலும் காரம் உப்பு புளிப்பு துவர்ப்பு கசப்பு குறைவாக சேர்த்துகொள்ள வேண்டும்.

புளிசாதம், எலுமிச்சைசாதம், தக்காளிசாதம், தயிர்சாதம் போன்ற சித்தராஅன்னம் அதிகம் உட்கொள்ளக் கூடாது

மேலும் வயிறு நிறைய உண்ணலாகாது. ஆகாரம் அரைவயிறு உட்கொள்ள வேண்டும்.

15 நாளைக்கு ஒருதரம் ஆண்பெண் தேகசம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருநாளைக்கு மூன்று மணிநேரம் தூங்கினால் போதுமானது.

பயம் ஜீரோவாக இருக்க வேண்டும்.

தவறு செய்யாதவர்களுக்கு பயம் தோன்றாது.

ஒரேக்கடவுள் என்ற உண்மை அறிந்து அருட்பெருஞ்ஜோதி ஒளியை மட்டும் வைத்து வழிபடவேண்டும்.

உடம்பை பொன்னிறமாக மாற்றும் ராஜ மூலிகை கரிசாலை !

நாம் தினம் தினம் கரிசாலையை எவ்வித தந்திரத்தாலவது உட்கொள்ள வேண்டும் உடம்பை பொன்னிறமாக (தங்கம்போல்) மாற்றும் தன்மை உடையது. மேலும் தூதுவளை, வல்லாரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அறிவு விளக்கத்தையும் ஞாபக சக்தியையும் உண்டுபண்ணும். மேலும் பூமிக்கு கீழே உள்ள கிழங்கு வகைகளை உட்கொள்ள வேண்டாம்.

கருணைகிழங்கு மட்டும் விதிவிலக்கு சேர்த்துக் கொள்ளலாம்

சூரிய வெளிச்சத்தில் விளையும் காய்கறிகள் கீரை வகைளை உட்கொள்ளலாம்.

நெய் பால் தயிர் மோர் இவைகளை ஆகாரத்தில் சேர்ப்பது தேகநஷ்டத்தை உண்டு பண்ணும். உடம்பு பாதிக்கும்போது ஏகதேசம் உட்கொள்ளலாம். 

வெண்ணீர்தான் குடிக்க வேண்டும். வெண்ணீரில்தான் குளிக்க வேண்டும்

இரவில் சிறிய வெளிச்சத்தில் நல்ல இறை சிந்தனையுடன் படுக்க வேண்டும் இடதுபக்கமாக அதிகநேரம் படுக்கவேண்டும் பிராணவாயு விரையம் ஆகாது.

தினமும் காலையில் 4-30 மணிக்கு அமுதக்காற்று வீசும் காலத்தில் எழுந்து காலைக்கடனை முடித்து நல்ல சிந்தனையுடன் தகரக்கண்ணாடிக்குள் ஜோதிவிளக்கு ஏற்றிவைத்து தவறாமல் மெல்லென அகவல் படித்து வழிபாடு செய்ய வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜோதியின் முன் அமர்ந்து கண்களை மூடாமல் ஜோதியை மட்டும் பார்த்து நோக்குவதே சுத்த சன்மார்க்க தியானம் என்பதாகும்

ஜோதியும் ஒளி கண்களும்ஒளி

மனமும்ஒளி

ஜீவனும்ஒளி

ஆன்மாவும்ஒளி

கடவுளும்ஒளி

ஒளி ஒளியுடன் இணைவதே தியானம் என்பதாகும்

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் நனவினும் மண்ணாசை கனவினும் பெண்ணாசை சுழுத்தியிலும் பொன்னாசை அறவே கூடாது.

*மேலே கண்டவாறு வாழ்க்கையில் கடைபிடித்தால் நரை திரை பிணி மூப்பு பயம் மரணம் வராமல் பாதுகாக்கப்படும்.* *சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அன்பு தயவு கருணையுடன் அருள் வழங்கி ஏற்றுக்கொள்வார்*.

மேலே கண்ட உணவு முறைகள் மற்றும் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களை முறையாக கடைபிடித்தால் பெறவேண்டியதை நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம்

உணவுமுறையை மாற்றி உடம்பை சுத்தமாக்கினால் உடம்பு பொன்நிறமாக மாற்றம் அடையும். அவ்வாறு மாற்றினால் மட்டுமே அருளைத் தாங்கும் பக்குவத்திற்கு உடம்பு வந்துவிடும்

(அருள் கோடிசூரிய பிரகாசத்திற்கும் மேலான சுத்த உஷ்ணமாகும்)

அதன்பின்பு புழுக்காத உணவு உட்கொள்ளும் பக்குவம் தானே வந்துவிடும்.

 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதற்குண்டான வாய்ப்பு சத்தியமாக உண்டாகும்.

உணவு முறைகள் தான் மரணத்திற்கு காரணம்

வள்ளலார் பாடல்!

சோற்றாசை யொடு காமச் சேற்றாசைப்

படுவாரைத் துணிந்து கொல்லக்

கூற்றாசைப்படும் எனநான் கூறுகின்றது

உண்மை 

இதனில் கொண்டு நீவீர்

நேற்றாசைப் பட்டவருக்கு இன்று அருள்வார்

போலும் அன்றி நினைத்த வாங்கே

பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபாபதிப் புகழைப் பேசு வீரே.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *