மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் தங்கி இருக்கும் போது மக்கள் தங்கள் குறைகளையும் துன்பங்களையும் போக்கிக்கொள்ள கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர்.
ஒருநாள் கொங்கண தேசத்தில் இருந்து வந்த இருவர் தங்களுக்குண்டான வெண் கருங்குஷ்டத்தால் வருந்துவதை விண்ணப்பிக்க வள்ளலார் ஐந்துவேலை மருந்துகொடுக்க பெற்றுக் குணமடைந்தனர்.
பொய் உண்மையானது
மக்கள் வள்ளலார் இடம் வந்து போவதை கவனித்த இருபது வயதுள்ள துலுக்கப்பையன்
(முஸ்லீம்பையன்) ஒருவன் வள்ளலாரை சோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று சிரங்கு என்றுகூறி இவற்றை நீக்கவேண்டும் என்று வேண்டினான் வள்ளலார் சிலநாள் பொறுத்துக்கொள் குணமாகும் என்றார்.
வெளியில் வந்து பஞ்சை அகற்றினான் சிரங்கு இல்லாத உடம்பு முழுவதும் சிரங்காகியது.
விளையாட்டு
வினையாயிற்று பின்பு வருந்தி சரணடைந்தான்.
வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் உள்ள கேணியில் மூழ்கச் சொன்னார்.
அவ்வாறே
மூழ்கியதும் குணமடைந்தான்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வைத்த தேர்வில் (சோதனையில்) எல்லாவற்றிலும் வெற்றிபெற்றவர் நமது வள்ளல் பெருமான்.
வள்ளலார் பாடல் !
” வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர்.
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே! “
இரகசியமாக சொன்னது
மேலும் ஒரு துலுக்க வைத்தியன் ஒருவன் வள்ளலாரிடம் வந்து என்னிடம் ஒரு ரகசியம் உள்ளது என்றான்.
என்ன ரகசியம் என்று வள்ளலார் கேட்க
ரஸபஸ்பம் செய்ய இன்ன மூலிகை உள்ளது என்று பிறர் கேட்காமல் ரகசியமாக வள்ளலார் காதில் மட்டும் கேட்கும்படி கூறினான்.
உடனே வள்ளலார் ரஸபஸ்பம் செய்வதற்கு பல மூலிகைகள் உண்டு என்று அனைவருக்கும் கேட்குபடி உரத்தகுரலில் கூறினார். மேலும் மூலிகையின் பெயரையும் வெளிப்படையாக கூறினார்.
தங்கம் செய்வதற்கும் ரஸபஸ்பம் செய்வதற்கும் ரஸம் கட்டுவதற்கும் பற்று அற்றவர்களுக்கே பலிக்கும்
வள்ளலார் பாடல் !
“பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி! (அகஙல் )
நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே! (அகவல்)
துறையிது வழியிது துணிவிது நீசெயும்
முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே! (அகவல்)
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே! ” (அகவல்)
நாம் தெரிந்து கொள்ள வேண்டியுது யாதெனில் ?.
உலகப்பற்றான மாயைப்பற்றை (பொருள்பற்றை) விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்றினால் எல்லாம் கைகூடும்.
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து !
வள்ளல் இருக்க வாட்டம் ஏன் நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896