வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட அறையை ஆய்வு செய்து உறுதிச்சான்று அளித்த கலெக்டர்?

மேட்டுகுப்பம் சித்திவளாகத்தில் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட பின்பு வெளியில் எவர்க்கும் தோன்றாமல் இருந்தார். 

வள்ளலார் சித்திவளாக அறைக்குள் செல்லும் முன்னே தெளிவாகச் சொல்லுகிறார்.

நான் உள்ளே சென்று பத்துப் பதினைந்து தினம் இருக்கப்போகிறேன். இந்த கதவைச் சாத்திவிடப் போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.

ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.

என்னை காட்டிக்கொடார் என்று மக்களுக்கு சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.

மேலும் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்றார். 

அய்யரைக் குதிரை முட்புதரில் தள்ளியது

திருக்காப்பிட்டுக் கொண்ட வள்ளலார் என்ன ஆனார் என்பதை தெரிந்துகொள்ள அன்றைய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கலெக்டர். பெரியடாக்டர்.

தாசில்தார் வெங்கடராம அய்யர் மூவரும் குதிரைமேல் ஏறிக்கொண்டு மேட்டுக்குப்பம் வந்தனர்.

வந்தவர்கள் சித்திவளாகத்தை சுற்றி சுற்றி பார்த்து வந்தனர்.

அதுசமயம் தாசில்தார் வெங்கடராம அய்யர் அங்குள்ளவர்களை மிரட்டும் தோரணையில் கடும்மொழி சிலகூறி திருக்கதவைத் திறக்கவேண்டும் என்று அங்குள்ளவர்களிடம் திறவுகோல் கேட்டனர். திறவுகோல் இல்லை தாள்மட்டும் போட்டுள்ளது. என்றார்கள்.

கலெக்டரும் டாக்டரும் இருவரும். இவர்போல் எல்லா மதங்களிலும் அருள்பெற்ற பெரியோர்கள் உள்ளார்கள் என்று தாசில்தாரிடம் சொல்லி அவர் செய்கையை சற்று கடிந்து கொண்டார்கள்.

அதன்பின்பு கதவைத் திறந்துபார்த்தார்கள். வள்ளலார் சொல்லியவாறு வெறும் வீடாகத்தான் இருந்தது.

கலெக்டர்துரை அவர்கள் மக்களிடம் இங்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார்.

வள்ளலார் ஆணையின்படி அன்னதானம் செய்தலும் கடவுளை மெல்லென துதித்தலுமாகிய தொண்டு புரிந்து வருகிறோம் என்று விடை கூறினர்.

கலெக்டர் டாக்டர் இரண்டு பேரும் அன்னதானம் செய்ய இருபதுரூபாய் கொடுத்தனர்.

பின்பு மூவரும் குதிரையில் ஏறிச் சென்றனர்.

கலெக்டர் டாக்டர் இருவரும் முன்னாடி சென்றனர் பின்னாடி வந்த தாசில்தாராகிய அய்யரை அவருடைய குதிரை மிரண்டு முட்புதரில் தள்ளியது

முன் சென்ற இருவரும் தாசில்தாரைக் காணோம் என்று திரும்பிவந்து பார்த்தனர்.

முட்புதரில் அய்யர் விழுந்து இருப்பதை பார்த்தவர்கள்

சித்தரை வைதபலன் இதுவென்று கூறி அய்யரை ஒரு கட்டைவண்டியில் ஏற்றுக்கொண்டு சென்றனர்.

இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது யாதெனில் ? 

வாய்பேசாத குதிரைக்கும் வள்ளலாரைப்பற்றி தெரிந்திருக்கிறது

வள்ளலார் போன்ற சுத்த சன்மார்க்க ஞானிகளைத் தூஷணஞ் செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

வள்ளலார் பாடல்!

“அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்

அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்

பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்

பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்

பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்

பின்படு தீமையின் முன்படு கின்றீர்

இச்சையில் கண்மூடி எச்சுகம் கண்டீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே! “

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *