கடலூரைச்சார்ந்த திருப்பாதிபுலியூர்க் கடுத்த பெண்ணை நதிக்கரையில் உண்ணாமலைச் செட்டியார் சாவடிக்கு சமீபத்தில் ஒர் கைநிமித்தியத் திருவிழாவைப்பற்றி அறிவுடையோர் சிலர் கூடினர்.
அவ்விடத்தில் சிதம்பரம் இராமலிங்கம் சுவாமிகளும் இருந்தனர். அப்போது பிரம்மசமாஜம் சம்பேடு ஸ்ரீதரசுவாமி நாயக்கரும் சிலருடன் வந்திருந்தனர்.
சந்தேகம் தெளிதல்
ஸ்ரீதரசுவாமிகள் செய்யும் பிரச்சாரத்தில் சந்தேகம் அடைந்த சிலர் தங்கள் சந்தேகத்தை நீக்கிக் கொள்வதற்குத் தக்கத்தருணம் இதுவென்றுக்கருதி அக்கூட்டத்தில் சிதம்பரம் இராமங்கசுவாமிகளை நோக்கி ஐயா பிரம்மத்தை நினைப்பதுதான் தகுதி என்றும். விக்கிரக ஆராதனை செய்வது தகுதியல்ல என்றும் இங்கே வந்திருக்கிற ஸ்ரீதரசுவாமிகள் அவர்கள் எங்கள் முன்பாகப் பலமுறை பிரசங்கித்துள்ளார் அதனால் எங்களுக்கு சந்தேகம் உண்டாகி இருக்கின்றது.
அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அப்போது இராமலிங்கசுவாமிகள். பிரம்மத்தைஅறியத் தொடங்கினோர் அறிதல்வேண்டும். விக்கிரக ஆராதனை செய்யத் தொடங்கினோர் செய்தல் வேண்டும்.
இவ்விருவகையும் அது அதற்குரிய பக்குவர்களுக்கு தகுந்த வகைகள் என்று அறியவேண்டும் என்று சொல்லினர்.
அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் நாயக்கரைப்பார்த்து இது விஷயத்தில் தங்கள் கோட்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றார்கள். நாயக்கர் கடிதம் மூலமாக வெளிப்படுத்துவேன் என்றார்.
அய்யா தங்கள் கோட்பாட்டை மற்றவர்கள் புரியும்வண்ணம் வெளிப்படுத்த வேண்டுமேத் தவிர கடிதம் மூலம் தெரியப்படுத்துவேன் என்பது சபைக்கு அழகல்ல என்றார்கள். இப்படியே முடிவுபெறாமல் வாதங்கள் நடந்து கொண்டே இருந்த்து.
இறுதியாக நாயக்கர் பிரம்மத்தை மனத்தால் நினைப்பது தக்கதென்றும் விக்கிர ஆராதனை செய்வது மனத்திற்கு தகாதென்பதும். எங்கள் பிரம்மசமாஜ வேதசமாஜ கோட்பாடு என்றும் வெளியிட்டார்
வள்ளலார் பதில்!
பிரமம் மனதில் எப்படி நினைக்கப்படும் ? ஆகாயம் அடியாலும் படியாலும் அளக்கப்படும். காற்று கையால் பிடிக்கப்படும் என்பவைபோல் வார்த்தை ஜாலங்களே அன்றி அர்த்த லட்சண அனுபவங்களுக்கு இடம்பெறவில்லையே என்று இராமலிங்க சுவாமிகள் வினவினர்.
மேலும் பிரமம் மனதிற்கு புலப்படாது என்றும்.
விக்கிர ஆராதனை மனத்திற்கு புலப்படும் என்றும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கினார்
அங்கிருந்த சிலர் நாயக்கரைப் பார்த்து சும்மா இருக்கபடாது பதில் உரைக்கவேண்டும் என்றார்கள்.
மீண்டும் மனத்தினால் பிரம்மத்தை நினைக்கக் கூடும் என்று முன் சொன்னதையே சொல்லினர்.
பிரமம் மனத்திற்கு விஷயமாகுமானால். கண்ணுக்கும் விஷயமாகும். கண்ணுக்கு விஷயமாகுமானால் இந்திரியங்களுக்கும் விஷயமாகும் என்பதை நான் முன்சொல்லியுள்ளதைத் தாங்கள் சிறிது உய்த்து உணரவேண்டும் என்று இராமலிங்கசுவாமிகள் சொல்லினர்.
நாயக்கர் சற்றுநேரம் சிந்தித்து மனத்திற்கு விஷயமாவது எல்லாம் கண்ணுக்கு விஷயமாகுமோ என்றார்.விஷயமாகும் என்றார் சுவாமிகள்.
நாயக்கர் மற்ற இந்திரியங்களுக்கு விஷயமாகாமல் மனத்திற்கே விஷயமாகத் தக்கது ஒன்றும் இல்லையோ? ஒன்றும் இல்லையோ? என்று கோபமாக பலமுறை வியந்து கேட்டார்
மனத்திற்கே விஷயமாகத் தக்கது யாது? அதனைத் தாங்களே வெளிப்படுத்தல் வேண்டும் என்று சுவாமிகள் சொல்லினர்.
ஆனந்தம் மனத்திற்கே விஷயமாகும் என்று நாயக்கர் சொல்லினர்.
இராமலிங்கசுவாமிகள் பதில்
ஒரு ரூப விஷயத்தை கண்கள் கண்டு.அந்த ரூப விசேடத்தால் ஆனந்த விருத்துயை அடைந்து.பின்னர் அதன்வழியாக மனத்திற்கும்.அவ்வானந்தத்தை யடைவிக்கும் என்றும்.
கண்கள்.முன்னர் ஆனந்தத்தை அடைந்ததற்கு அடையாளம்.அக் கண்களிலிருந்து சிந்துகின்ற பாஷ்யங்களே யென்றும்.அதை ஆனந்த பாஷ்யம்என்று வழங்குவதே போதுமான பிரமாணமென்றும்அறியவேண்டும்.
இங்கனம் கண்முதலிய இந்திரியங்களும்.மனம் முதலிய கரணங்களும்.
ஆன்மாவிற்கு உபகாரக் கருவிகளே.
ஆதலால் அவைகள் ஆனந்தம் அடைந்தது என்பது உபசரிப்புஎன்றும்.ஆனந்தம்.பிரத்தியேக ஆன்மஞான விஷயம் என்பது உண்மை என்றும் சுவாமிகள் சொல்லினர்.
பின்னர் சற்றுநேரம் சென்று ஓர் இந்திரியத்திற்கு விஷயமாவது வேற்ஓர் இந்திரியத்திற்கும் விஷயமாகும் என்பது எப்படி ?
காதுக்குப் புலப்படுவது மூக்குக்குப் புலப்படாது. கருத்துக்குப் புலப்படுவது கண்ணுக்குப்படாது என்று நாயக்கர் சொல்லினர்
மனதிற்கு புலப்படுவது பிரபஞ்சம். அதுகண்களுக்கும்புலப்படும் என்றும் சுவாமிகள் சொல்லினர்.
மனத்திற்குப் பிரமம் புலப்படாதோ? என்று பண்டிதர் வினவினார்கள்.
பிரமம் மாயாதீதம் ஆதலால் மாயாகாரியமாகிய மனத்திற்குப் புலப்படாது என்றும் சுவாமிகள் சொல்லினர்
ஆனால் பிரமத்தை எப்படி அறியலாம் என்று பண்டிதர் வினவினார்கள்.
ஆன்ம ஞானத்தால் அறியலாம் என்று சுவாமிகள் சொல்லினார்
ஆன்ம ஞானத்தால் அறியலாம் என்று சொல்லியதைக் கேட்டு பண்டிதர் சும்மா இருந்தார்கள்.
இன்னும் விரிக்கில் பெருகும் என்பதால் சுருக்கி சொல்லி உள்ளேன்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது யாதெனில்?
கடவுளுக்கு ஒளி உருவம் உள்ளது. ஆன்மாவிற்கு ஒளி உருவம் உள்ளது. பிரமம் என்பது உருவம் அற்றது.
உருவம் இல்லாத பிரமத்தைக்கொண்டு உருவம் உள்ள கண் மனம் ஜீவன் ஆன்மா மற்றும் கடவுளைக் காணமுடியாது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தத்துவ உருவங்களான சிலைகளை வணங்க வேண்டாம் என்பது வள்ளலார் காட்டிய சுத்தசன்மார்க்க கொள்கை.
ஒளி உருவமான கடவுளை வழிபடவேண்டும் என்பதால் சத்திய ஞானசபையைத் தோற்றுவித்து ஒளி என்ற உருவத்தை வழிபடவும் அதனால் ஆன்மலாபம் என்ற அருள் ஒளியைப்பெறவும் வழிகாட்டி உள்ளார்.
வள்ளலார் பாடல்!
” உருவராகியும் அருவின ராகியும் உரு அரு வினராயும்
ஒருவரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும்
ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்து உழல்வது ஏன் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே.! “
மேலே கண்ட பாடல்வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
மேலும்
” பரமதனோடு உலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
பிரமம் எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்….மேலும்
பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
தரம்அறிய வினவுகின்றாய் தோழி இதுகேள்நீ
சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்…”
சுத்த சன்மார்க்கம் சார்ந்தால்தான் எல்லா உண்மைகளையும் அறிந்து கொள்ளமுடியும்
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !