வள்ளலார் கூறியபடி ஜீவகாருண்ய சேவை செய்ததால் கர்மவினை விலகி குழந்தை பாக்கியம் உண்டான உண்மை வரலாறு!

புதுச்சேரிக்கும் மஞ்சகுப்பத்திற்கும் இடையில் சுங்கம் வசூல் செய்யும் ரெட்டிச்சாவடியில் அமீனாக பணிபுரிந்தவர் மாயூரம் சிவராமய்யர் என்பவராகும்.

அவருக்கு நிறையசொத்து பெரிய பங்களாவீடு பொருள் நிறைந்தவர். வசதி வாய்ப்புக்கள் நிறைய இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாக்குறையால் அவரும் அவரதுமனைவியும் மிகவும் வருந்தினர்.

மனவிக்கு கிரகதோஷம் உண்டு என ஜோதிடரும் மற்றும் பலர் சொல்லவும் பலபல பரிகாரங்கள் செய்தும் குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை.

வடலூர் வள்ளலாரிடம் சென்று உங்கள் குறையை சொல்லுங்கள் என அன்பர்கள் சொல்லவும் சிவராமய்யரும் அவர்மனைவியும் வடலூருக்கு வந்து வள்ளலாரிடம் விண்ணப்பித்தனர்

அன்னசத்திரம் கட்ட சொல்லியது

பண்ருட்டிக்கும் வடலூருக்கும் மத்தியில் பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள கன்றகோட்டைப் புலவனூரில் ஒருசத்திரம் கட்டி அன்னதானம் செய்யுங்கள் என்று ஆணை இட்டார் வள்ளலார்.

அவ்வாறு செய்தால் ஒரு அழகான ஆண்மகன் பிறப்பான் என்றார் வள்ளலார்.

வள்ளலார் சொல்லியவாறு சிவராமய்யரும் மனைவியும் சத்திரம் கட்டி அன்னதானத்தை மகிழ்ச்சியுடன் சிறப்பாக செய்தார்கள்.

வள்ளலார் சொல்லியவாறே அழகான ஆண்குழந்தை பிறந்தது வாரிசு இல்லாக்குறை தீர்ந்தது.

வள்ளலாரை சோதிக்க வந்த சாஸ்திரிகள்!

ஒருநாள் சாஸ்திரிகள் நால்வர் சாமவேத்த்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாகத்தில் கேள்விகேட்டு

வள்ளலார்ரைச் சோதிக்க எண்ணி வடலூர் வந்து சேருகின்றனர்.

அச்சமயம் வள்ளல்பெருமான். சாமவேதத்தில் அவர்கள் எண்ணிய பாகத்தையே பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார்.

சாஸ்திரிகள் வள்ளலாரின் பூரண ஞானத்தை அறிந்து வியந்து பாராட்டி இன்பக்கடலில் மூழ்கினர். ” என்ன புண்ணியம் செய்தோமோ என ஆனந்தம் அடைந்தனர்.” பின்பு வணங்கி ஆசிபெற்று சென்றனர்.

வள்ளலார்பாடல்!

” அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான்செயினும் நீபொறுத்தல்*

வேண்டும்

தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.! “

வள்ளல்பெருமான் அவர்கள் சாதி சமயம் மதம் என்ற பேதம் இல்லாமல் தன்னைத் தேடிவரும் மனிதர்கள் அனைவருக்கும்

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமலும்.சித்து வேலைகள் செய்யாமலும் முறையான செய்யத்தகுந்த வழியைக்காட்டி நன்மைசெய்து.

துன்பம் தொலைத்து இன்பம் அளித்து அனுப்புவதே குறிக்கோளாகவும் லட்சியமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்

அதேபோல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு தயவு கருணைகாட்டி உயிர்இரக்கமே வாழ்க்கையின் முழுமூச்சாக கொண்டு எவ்வித பேதமும் இல்லாமல் தம்உயிர்போல் நேசித்து பாராட்டி வாழ்ந்துள்ளார்.

ஆதலால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு பூரண அருள்வழங்கி ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி முத்தேக சித்தியை வழங்கினார்.

மேலூம் மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து பேரின்ப சித்திப்பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்

உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களாகிய நாம் வள்ளலார்போல் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *