“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் எம் தமிழ் கவி பாரதி, வள்ளலார் வழியில் பசியோடு இருப்பவர்கள் எங்கு இருந்தாலும் விரைந்து சென்று அவர்களுக்கு உணவு அளிப்பதே தலையாய கடமையாய் / கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருவது நம் அறக்கட்டளையின் சீறியச் செயல்பாடாகும்..
விடுதலையும், சுதந்திரமும் மாறி மாறி பெற்று ஆண்டுகள் பலவாயினும் இன்னும் நம் பாரதத்தில் ஒருவேளை உணவிற்குக்கூட வழி இல்லாத மனிதர்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். சரியாக சொல்வோமேயானால் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 14.8% சதவீத மக்களுக்கு உணவு பட்டகுறை நம் தேசத்தில் நிலவி கொண்டிருக்கின்றது என்பதனை 2018 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெல்ல தெளிவாக தெரிகின்றது.
இது ஒருபுறம் இருக்க ஒட்டுமொத்த உணவு உற்பத்தியில் 40% உணவானது நம் இந்தியாவில் வீணடிக்கப்பட்டு கொண்டிருப்பதாக மற்றொரு கலந்தாய்வில் நமக்கு அறிய வருகின்றது.
தொடர் சமுதாயப் பணியாக மக்கள் பசி போக்கும் அருட்பணி.
ஒருபுறம் பசி வறுமையால் மரணம், மற்றொருபுறம் அதீத உற்பத்தி மற்றும் வீணாக்குதல். உணவு வீணாக்க படுகின்ற இடங்களை கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பெறப்பட்ட உணவினை எடுத்துச் சென்று பசியோடு இருப்பவர்களுக்கு வழங்குவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது நம் அறக்கட்டளை.
பசியோடு இருப்பவர்களை கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் யாம் சகித்திட மாட்டோம் என்பதற்கு ஏற்ப பசியுள்ளவர்களை தேடிச் சென்று அன்னம் வழங்கி வருகின்றோம்.
பிறந்தநாள், திருமணநாள் மற்றும் உங்கள் இல்லத்தின் உடைய சுப நிகழ்வு தினங்களில் நீங்களும் அன்னம் தந்து மகிழலாம்.
பசித்தோர் முகம் பார்த்து இருந்தேனோ! என்றார் வள்ளலார். அதாவது பசித்தோர் முகம் பார்த்து அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு உணவு கொடுக்காமல் இருப்பது பாவச் செயலாக எடுத்துரைத்த வள்ளலார் நெறியில் நின்று தினசரி பசித்தவர்களைத் தேடிச் சென்று உணவு வழங்கி வருகின்றோம்.
ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். அதனால் உபகாரசத்தி விளங்கும். அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.
ஜீவகாருண்யம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும். உபகாரசத்தி மறையும். உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும். ஆகலின் புண்ணியமென்பது ஜீவகாருண்யம் ஒன்றே என்றும் பாவம் என்பது ஜீவ காருண்யமில்லாமை என்றே அறியப்படும். - வள்ளலார்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’. ‘பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’ என்ற வள்ளலார் உடைய கோட்பாட்டிற்கு இணங்க ஆதரவற்ற ஏழை மக்களுடைய பசிப்பிணியை போக்குவதற்கு தினசரி அருள் உணவினை R.P மிஷன் பவுண்டேஷன் வழங்கிவருகின்றது.
கொரோனா பேரிடர் காலம் தொடங்கி திண்டிவனம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில், பஸ் நிறுத்தங்களில், நடைபாதையில், மரத்தின் நிழலில், சுரங்கப் பாதைகளில் ஆதரவற்று வாழும் மக்களுக்கு தேடிச் சென்று உணவு வழங்கும் மக்கள் நலப்பணி.